பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கிய ஜப்பான் நபர்!

பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கிய ஜப்பான் நபர்!

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நிஜ நரிப்போல மாற வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினை அணுகி பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கியுள்ளார். இது சமூக வலைதளத்தில் கவனமீர்த்துள்ளது. பலரும் இதற்கு கமெண்ட்களை பதிவிட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ’Zeppet’ என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்திடம் ஒருவர் தனக்கு நரிபோன்று இருக்க வேண்டும் என்றும், அதைப்போலவே ஒரு டிரெஸ் செய்துகொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். தான் நரிபோன்றிருக்க வேண்டும் என்று எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை என்ற நிலையில் அவரின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

விலங்குகள் என்றால் அவருக்கு அவ்வளவு ப்ரியம். சிறுவயதில் இருந்தே விலங்குகள் மீதிருந்த ப்ரியத்தாலும், பல அனிமேசன் படங்களில் விலங்குகளைப் பார்த்ததால், அவருக்கு நிஜ நரிபோல ஆக வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். என்றைக்காவது ஒருநாள் நரியின் உருவத்தில் ஆக வேண்டும் என்ற அவரின் எண்ணத்திற்கு ‘Zeppet’ நிறுவனம் உயிர் கொடுத்திருக்கிறது.

இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.5 லட்சம் செலவிட்டிருக்கிறார். இதற்கான ‘Zeppet’ ஸ்டூடியோ பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நிஜ நரியைப்போல வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மெனக்கட்டு செயல்பட்டிருக்கிறது.

நரியின் உருவத்தில் மாறிய அனுபவத்தைப் பகிந்துகொண்ட நபர் கூறுகையில், “ நிறுவனம் மிகவும் திறமையாக ஆடையை வடிவமைத்துள்ளது. அவர்களின் பணி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. இது என் வாழ்நாள் கனவு. நிஜ நரியைப் போல இருக்க வேண்டும் என்று என் ஆசை நிஜமாகியிருக்கிறது. இதை என்னால் மறக்ககவே முடியாது. என் கற்பனையில் இருந்ததை அவர்கள் நிஜத்தில் கொண்டுவந்துவிட்டனர். “ என்று பூரிப்போடு தெரிவித்தார்.

இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருள் ஆகியிருக்கிறது.

Leave a Reply