எம்ஜிஆர் ஒரு கோழை… எமர்ஜென்சி நேரத்தில் பயந்து பம்மியவர்… இதை பகிரங்கமாக சொல்லுகிறேன்…பொது வெளியில் உளறிய ஆர்.எஸ் பாரதி….

சென்னை;
திமுகவில் இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசினார் .
அவர் பேசும்போது , மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொன்னவர் . இன்றைக்கு எவன் எவனோ பேசுகிறானே , இந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை இவ்வளவு கூச்சல் போடுகிறானே.. அந்த கட்சி அன்றைக்கு எமர்ஜென்சி நேரத்தில் ஜனசங்கம் என இருந்தது, அதையும் கலைச்சுட்டாங்க.
மாநில கட்சிகள் எல்லாம் கலைத்து விட்டார் அம்மையார் இந்திரா காந்தி .
ஏன் எம் ஜி ஆ ரே அண்ணா திமுக என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சியை எமர்ஜென்சி நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் பயந்துகொண்டு பம்மினார். இவருக்கு பெரிய புரட்சி தலைவர் என்ற பட்டம் வேற. யாரையும் கேட்காமல், கொள்ளாமல், அண்ணா திமுக என்பதை அனைத்திந்திய அண்ணா திமுக என்று மாற்றிக்கொண்ட ஒரு கோழை தான் எம்ஜிஆர் என்பதை பகிரங்கமாக நான் சொல்லுகிறேன்.
நாவலர் குடும்பத்தில் யாரும் ஜெயிலில் இல்லை, ராஜாராம் குடும்பத்தில் யாரும் ஜெயிலில் இல்லை, பேராசிரியர் குடும்பத்திலும் யாரும் ஜெயிலில் இல்லை, மாதவன் குடும்பத்திலும் யாரும் ஜெயிலில் இல்லை. ஆனால் தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற தலைவர் கலைஞர் வீட்டிலேதான் இரண்டு பேர் மிசா கைதிகளாக இருக்கிறார்கள். ஒரு முரசொலி மாறனும், தளபதி மு.க ஸ்டாலின் திருமணமாகி நான்கே மாதத்தில் 22 வயதில் ஜெயிலில் இருக்கிறார்.
ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்ற கட்சி இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடையாது என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.