எங்க ஆட்சியில் கொஞ்ச நஞ்சமா போராட்டம் நடத்துனீங்க… ஆனா திமுக ஆட்சியில நல்லா ஜால்ரா அடிக்கிறீங்க… கம்யூனிஸ்ட்களின் நிலையை பற்றி விளாசிய எடப்பாடி…

சேலம் ;
சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த 8 வழிச்சாலையை அன்றைய தினம் திமுக தமிழகம் முழுவதும் எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.
திமுகவின் கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. கொஞ்ச நஞ்ச போராட்டம் நடத்தல எல்லாருமே போராட்டம் நடத்துனாங்க. ஆனா இப்போ எல்லாம் நல்லா ஜால்ரா அடிக்கிறாங்க.
அதே திட்டத்தை திமுக கொண்டு வருகின்றது என அறிவிக்கின்றார்கள். மத்திய அரசுகிட்ட போராடிட்டு இருக்கிறாங்க. இன்றைக்கு அந்த கூட்டணி கட்சி எல்லாம் அவருக்கு நல்லா ஒத்து ஊதுகிறார்கள்.
இன்றைக்கு அருமையா இந்த சாலை அமைத்திருக்கலாம். இந்த நாலு வருஷத்துல அந்த சாலை பிரம்மாண்டமாயிருக்கும். இங்கிருந்து சென்னைக்கு அருமையா நாம எல்லாம் போகலாம், அதை கெடுத்து தொலைச்சுட்டாங்க.
இவ்வாறு தெரிவித்தார்.