பெண்களுக்கு விதவிதமான புதுப்பொலிவுடன் வந்திருக்கும் புடவைகள்!!

பெண்களுக்கு விதவிதமான புதுப்பொலிவுடன் வந்திருக்கும் புடவைகள்!!

ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி இந்த பொங்களுக்கு என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

  • சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும் ,உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

*செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

*செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

*பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

*செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

*பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.
….

Leave a Reply