என்ன , அதிமுக நாலா ஓடைஞ்சிருக்கா.. உங்கள எம்.பி ஆக்குனதே நாங்கதான்… எங்கள சீண்டினால் பதிலடி உறுதி ..” – அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…

என்ன , அதிமுக நாலா ஓடைஞ்சிருக்கா.. உங்கள எம்.பி ஆக்குனதே நாங்கதான்… எங்கள  சீண்டினால் பதிலடி உறுதி ..” – அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…

சென்னை;

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஈபிஎஸ்-இன் ஆதரவாளரான ஜெயக்குமார் இன்று சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,

“அதிமுக தான் அன்புமணியை எம்.பி என அடையாளம் காட்டியது. அப்படி எல்லாம் இருந்து விட்டு தற்போது அதிமுக நான்காக உடைந்துவிட்டது என்றால் நிச்சயமாக இந்தக் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கண்டிப்பாக அன்புமணியைப் பார்த்து எள்ளி நகையாடும் வகையில்தான் அவரது கூற்று உள்ளது. இதுபோன்ற கருத்துகளை சொல்லி சிறுமைப்படுத்தும் வேலையில் தயவு செய்து எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம்.

அப்படி வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி நிச்சயமாக நாங்களும் கொடுப்போம். ஒன்று சொன்னால் நாங்கள் நூறு சொல்லுவோம்.

ஒருபக்கம் ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். சம ஊதியம் சம வேலை எனச் சொன்னது திமுக தான். பல நாட்களாக போராட்டம் செய்கிறார்கள். போராட்டத்திற்குத் தீர்வு காணும் விதத்தில் குழு ஒன்று போடுகிறார்களாம்.

அந்தக் குழுவே கண் துடைப்புக் குழுதான். குழு போடுவதெல்லாம் சுத்த விடும் வேலைதான்” எனக் கூறினார்.

Leave a Reply