டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டும் கும்பல் … கோவை கலெக்டரிடம் புகார் …

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 2 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டும் கும்பல் … கோவை கலெக்டரிடம் புகார் …

கோவை ;

டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டிலுக்கு 2 ரூபாய் மாமுல் தர வேண்டும் என மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் சங்க கூட்டுக்குழு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டுக்குழு வினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர். அதில் அவர்கள் கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது.

இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் இதனிடையே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத  திலக், விக்கி, சஞ்சய் என்னும் மூன்று பேர்  பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் மாமூல் தரவேண்டும் என தங்களை மிரட்டுகின்றனர்.

எங்களுடைய அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம் இந்த நிலையில் தற்போது அவர்களுடைய மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு தனிநபரின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பணம் கேட்டு  மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதேபோல தமிழ்நாடு அரசின் பெயருக்கும் அந்த துறையின் அமைச்சரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் சிலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply