மேடையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ… நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு ..

மேடையில் துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ…  நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு ..

மத்திய பிரதேசம் ;

மத்திய பிரதேசத்தில் தனியார் நிகழ்வில் ஒன்றில் துப்பாக்கியை காட்டி டான்ஸ் ஆடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் கோட்மா சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸின் சுனில் சரஃப். இவர் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நபர். அண்மையில் தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சரஃப், அந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியை காட்டி நடனமாடியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், சுனில் சரஃப் மேடையில் நான்கு பேருடன் நடனமாடும்போது கைத்துப்பாக்கியை வைத்திருப்பதை தெளிவாக காணலாம். இது சுனில் சரஃப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அனுப்பூர் எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சரஃப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில காவல்துறையும் தெரிவித்துள்ளது.

சுனில் சரஃப் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த அக்டோபரில், ரேவாங்சல் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுனில் சரஃப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply