டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்…

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்…

கோவை ;

சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம் பாளையம் அரசு மதுபான கடை மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு அதிஷ்டவசமாக ஊழியர்கள் உயிர்தப்பினர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தில் கடை எண் 1811 கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் சேல்ஸ் மேன்களாக கரியபெட்டன், குணசேகரன் ஆகியோர் நேற்று மாலை கடையில் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கடையில் இருந்த ஊழியர்களிடம் கடையின் நம்பரை  கேட்டதாக கூறப்படுகிறது ஊழியர்கள் கடை நம்பரை கூறியதும் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியுள்ளனர்.

இதனால் கடையில் தீ பற்றி எரிய தொடங்கியது..  இந்த சம்பவத்தால் விற்பனைப் பணத்தை எடுத்து கொண்டு உள்ளே இருந்த ஊழியர்கள் மூவரும் வெளியில் ஓடி உயிர் தப்பினர்.

இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து தடயங்களையும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply