தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாத தி.மு.க. எம்.பி… அதிகாரிகள் அதிர்ச்சி…. ஏற்கனவே பூமி பூஜை சர்ச்சையில் சிக்கிய அதே எம் பி …

தருமபுரி ;
மாநில அளவிலான விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கொடிக்கு தருமபுரி எம்பி செந்தில்குமார் மரியாதை செலுத்தாத நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியிலுள்ள சப்தகிரி பொறியியல் தனியார் கல்லூரியில் இன்று மாநில அளவிலான 63வது குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செய்த பின்னர், அமைச்சர் பன்னீர்செல்வம் விளையாட்டு போட்டியினை துவக்கிவைத்து, மாணாக்கர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக, கொடியேற்றும் நிகழ்வின் போது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால், அமைச்சர் அருகிலே நின்று கொண்டிருந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாத காட்சி தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இவர் பூமி பூஜை நடத்த கடும் எதிர்ப்பை பதிவு செய்வார். பூஜை மற்றும் ஆகமங்களை கண்டாலே இவருக்கு அலர்ஜி. ஆனால் மற்ற மத வழிபாடுகளை கண்டு கொள்ள மாட்டார் .இது போன்ற நிகழ்வுகளால் சொந்த கட்சியினரே இவர் மீது கடுப்பில் இருந்து வருகின்றனர் .
இந்நிலையில் தேசியக்கொடிக்கு கூட ஒரு மரியாதை செய்யாத இவர் எம்பி யாக இருக்கவே தகுதியில்லாதவர் என்று பொது மக்கள் பேசி வருகின்றனர் . இவரது இந்த செயல் கட்சி மேலிடம் வரை சென்றுள்ளது. மேலும் அடுத்த முறை இவரை நிச்சயம் ஒரு கவுன்சிலர் க்கு கூட கட்சி மேலிடம் நிறுத்த யோசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது