ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் மாரடைப்பால் காலமானார்… தொண்டர்கள் அதிர்ச்சி ..

ஈரோடு :
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா(46) மாரடைப்பால் காலமானார் .
திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவெரா. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்.
மருத்துவமனையில் இருந்து திருமகன் ஈவெராவின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருமகன் ஈவெராவின் திடீர் மரணம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ..