அஜித்தின் ‘துணிவு’ புதிய புகை ப்படங்களை வெளியிட்ட படக்குழு!!

அஜித்தின் ‘துணிவு’ புதிய புகை ப்படங்களை வெளியிட்ட படக்குழு!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

Leave a Reply