தாய்மார்கள் பிரசவத்திற்கு பின்பு வயிற்று தசையை இறுக்கமாக்கி வயிற்றை குறைப்பது பற்றி பார்க்கலாம்!!

தாய்மார்கள் பிரசவத்திற்கு பின்பு வயிற்று தசையை இறுக்கமாக்கி வயிற்றை குறைப்பது பற்றி பார்க்கலாம்!!

கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வயிற்று சதைகள் நெகிழ்வடைவதால் வயறு பெரிதாக தோற்றமளிக்கிறது. பிரசவத்திற்கு பின்பு வயிற்று தசையை இறுக்கமாக்கி வயிற்றை குறைப்பது பற்றி பார்க்கலாம்.

1) தாய்மார்கள் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் சுமார் 500 முதல் 600 கலோரிகள் உடலில் இருந்து வெளியேறி, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. கொழுப்பு சேராமலிருந்தால் விரைவில் வயிற்று தசைகள் இறுக்கமாகும்.

2) குழந்தை பிறந்த இரண்டு வாரத்திற்கு பின்பு இடுப்பு பகுதிகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பை குறைக்கவும், வயிற்றுப் பகுதி, இடுப்பு பகுதி தசைகளை உறுதியாக்கவும், புஜங்காசனம், திரிகோணாசனம், உஸ்த்ராசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.

3) குழந்தை பிறந்த மூன்று முதல் நான்கு வாரத்திற்கு பின்பு இடுப்பு வயிற்றை சுற்றி ‘போஸ்ட் பார்டும் அட்ஜஸ்டபிள் அப்டாமினல் பெல்ட்’ பயன்படுத்த வேண்டும்.

4) குழந்தை பிறந்த அடுத்த நாளிலிருந்து லவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு சேர்ந்த டீ இருவேளை குடிக்க வேண்டும்.

5) குழந்தை பிறந்த பின்பு தினம் ஒரு வேளை ‘கொள்ளு குடிநீர்’ குடிக்கலாம்.

கொள்ளு குடி நீர் தயாரிக்கும் முறை: வறுத்த கொள்ளு பொடி 2 டீஸ்பூன், பூண்டு 3 பல், ஒரு சிட்டிகை வறுத்த பெருங்காயம், மிளகு 5, தேவையான அளவு உப்பு. இவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது வயிற்றைக் குறைப்பதுடன், தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும்.

6) சித்த மருத்துவத்தில் ஏலாதி சூரணம் ஒரு கிராம், குங்கிலியப் பற்பம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. இவற்றை வெந்நீரில் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

7) தினமும் சிறிது நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி (பிரணாயாமம்) மற்றும் வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகளை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

Leave a Reply