பிரதமர் மோடியை குடுக்க சொல்லுங்க … எங்களுக்கு ஓகே தான் … தமிழக அமைச்சர் கிண்டல் …

சென்னை:
பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் பாஜக விவசாய அணி மாநிலப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும். விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று அரசு மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
மேலும் புதுக்கோட்டை திலகர் திடலில் பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பாஜகவினர் கைகளில் தேங்காய் வைத்துக்கொண்டு போராட்டம் செய்வதற்காக ஆட்டோவில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை ஏற்றி வந்தனர் இந்த ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் காவல்துறைக்கும் பாஜக விளக்கம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேங்காயை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் மறியலில் ஈடுபடுவோம் என்று பாஜகவினர் கூறியதை அடுத்து காவல்துறையினர் தேங்காய் ஆட்டோவை விடுவித்து பாஜகவிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்கக் கோரி பாஜகவினர் ஆர்பாட்டம் செய்வது பற்றி அமைச்சர் செஞ்சி மாஸ்தானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பிரதமர் மோடி வேண்டுமானால் பொங்கல் பரிசுடன் தேங்காய் வழங்கட்டும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கிண்டலாக கூறினார்.