அண்ணாமலையை முகநூலில் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த வாலிபர்…. கைது செய்து உள்ளே தள்ளிய போலீஸ் …

அண்ணாமலையை முகநூலில் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த வாலிபர்…. கைது செய்து உள்ளே தள்ளிய போலீஸ் …

கோவை;

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாச வார்தைகளால் பேசி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் பாஜக மண்டல பொறுப்பாளர் முகுந்தன் என்பவர் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த புகார் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தம ராமசாமி, வசந்தராஜன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆபாச வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அண்ணாமலை குறித்து முகநூலில் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கோவை போத்தனூர் போலீசார் ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b),504,505(1)(b),509 ஆகிய பிரிவுகளின் கீழ் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரமேஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply