போர் வீரன் .. எங்கள் ஆருயிர் அண்ணனே … வருக வருக … உதயநிதியை புகழ்ந்து தள்ளி வரவேற்ற மூத்த தமிழக அமைச்சர்…

போர் வீரன் .. எங்கள் ஆருயிர் அண்ணனே … வருக வருக … உதயநிதியை புகழ்ந்து தள்ளி வரவேற்ற மூத்த தமிழக அமைச்சர்…

சென்னை;

அண்மையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உதயநிதியை வரவேற்று பேசியது வைரலாகி வருகிறது.

அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் பேராசிரியர் அன்பழகன் புகழ் ஓங்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 13 நிகழ்ச்சிகள் என்று வரையறுக்கப்பட்டு இன்று 7 ஆவது நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் போர் வீரனாக வளம் வந்துகொண்டிருக்கிற எங்கள் ஆருயிர் அண்ணன் உதயநிதியை வரவேற்கிறோம் என்று சேகர் பாபு பேசினார்.

கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமல் சேகர்பாபு மேடையில் பேசியதும் அதை கவனிக்காதவாறு உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டே சேகர் பாபுவை பார்த்ததும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

சேகர் பாபுவின் அரசியல் அனுபவம்தான் உதயநிதியின் வயது;  ஓர் அளவுக்கு ஐஸ் வைக்கலாம் ஆனால், இப்படியா மேடையில் முட்டுக்கொடுப்பது என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

 மேலும், இதுகூட பரவாயில்லை, எங்கோ வெளிநாட்டில் இருக்கும் இன்பநிதியை சின்ன ஜமீன்தாரர் என்றும் அவரை அடுத்த முதல்வராக பார்த்துவிட்டு செத்து விடலாம் என்று முன்னாள் எம்எல்ஏ வி.பி. ராஜன் பேசியதை விடவா என்று வலைதளங்களில் பொது மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Reply