வார்டுக்கு நிதி ஒதுக்காததால் ஒன்றிய அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா செய்த பெண் கவுன்சிலர்…. பரபரப்பு …

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் தலைமையில் இன்று (ஜன.06) நடைபெற்றக் கூட்டத்தில் நெல்லிவாசல் நாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை எனக் கூறி, ஒன்றிய சேர்மன் மற்றும் BDO-வை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் பிரபாவதி, கூட்டத்தின் மத்தியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கவுன்சிலர் பிரபாவதி கூறுகையில்;
என்னுடைய வார்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று ஆறு தடவைக்கும் மேல் பிடிஓ மற்றும் சேர்மனிடம் கேட்டும் இதுவரை எந்தநிதியும் ஒதுக்கவில்லை ஆதலால் வேறு வழியில்லாமல் இந்த தர்ணா போராட்டத்தை தொடங்கியதாக தெரிவித்தார்.
கவுன்சிலரின் இந்த தர்ணா போரட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தை பிரபாவதி கைவிட்டார்.