மின் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் … கைது செய்து‘’ஷாக்’’கொடுத்த போலீஸ்..

மின் இணைப்பு  பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் … கைது செய்து‘’ஷாக்’’கொடுத்த போலீஸ்..

கடலூர்:

திருப்பாதிரிப்புலியூர் மின்சார அலுவலகத்தில் சசிகுமார் என்கிற உதவி மின் பொறியாளர் பணிபுரிந்து வருகிறார்.

அவர் கம்பியம் பேட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் வீட்டின் மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து செல்வகுமார் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

அதன்படி செல்வகுமார் இன்று 8 ஆயிரம் ரூபாயை உதவி மின் பொறியாளர் சசிகுமாரிடம் கொடுத்தார்.

 அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சசிகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Leave a Reply