விஜயகாந்துக்கு வைத்த அதே குறி அண்ணாமலைக்கும் .. இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் ..பிரபல இயக்குனர் அறிக்கை ..

விஜயகாந்துக்கு வைத்த அதே குறி அண்ணாமலைக்கும் .. இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் ..பிரபல இயக்குனர் அறிக்கை ..

சென்னை:

அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள்.

இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமான பேரரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

மேலும் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதலும் ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தான் தரும் ஆதாரங்களின் அடிப்படையில் அரை மணி நேரம் செய்தி வெளியிடும்படி குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நிருபரிடம் கூறினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பத்திரிகையாளர்களிடம் நாகரீகமற்ற முறையில் அண்ணாமலை நடந்து கொள்வதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பாஜக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பொதுமக்களில் சிலர் கூறும்போது ;

தமிழகத்தில் சிலர் குறிப்பிட்ட அஜென்டாவுடன் பத்திரிகையாளர் போர்வையில் வந்து கேள்விகள் கேட்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அண்ணாமலையின் பாணியில் தான் பதில் அளிக்கப்படும் எனக்கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரான பேரரசு அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில்,

‛‛அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்த. கட்சி சார்ந்த சில பத்திரிகையாளர்களின் நடவடிக்கையால் அந்த நல்ல மனிதரை காமெடி ஆக்கிவிட்டார்கள். தற்பொழுது அதேபோல் ஒரு சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என தெரிவித்துள்ளார்”

Leave a Reply