டிப்பர் லாரி உரிமையாளரை  அரிவாளால் வெட்டிய  திமுக ஊராட்சி தலைவர் மகன் … அதிர்ச்சி சம்பவம்…

டிப்பர் லாரி உரிமையாளரை  அரிவாளால் வெட்டிய  திமுக ஊராட்சி தலைவர் மகன் … அதிர்ச்சி சம்பவம்…

காஞ்சிபுரம்;

 காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி உரிமையாளரை திமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம்  குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியில் கண்ணன் (31) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கம்மவார்பாளையம் கடைவீதியில் எம் சாண்ட், டிப்பர் லாரி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், கம்மவார் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த கண்ணனை, கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், திமுக கட்சியின் பிரமுகருமான முருகன் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் என்பவர் கத்தியால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயத்துடன் இருந்த கண்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள். ஏற்கனவே ஹரி கிருஷ்ணன் மீது சில வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள கம்மவார் பாளையம் கடைவீதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

Leave a Reply