எங்க தலைய பாத்து கேலியும், கிண்டலும் பண்றாங்க… பொண்ணும் தரமாட்டேங்குறாங்க..அதனால மாசம் ரூ.6,000 ஓய்வூதியம் குடுங்க… வழுக்கை தலையர்கள் முதல்வருக்கு கோரிக்கை..

எங்க தலைய பாத்து  கேலியும், கிண்டலும் பண்றாங்க… பொண்ணும் தரமாட்டேங்குறாங்க..அதனால மாசம் ரூ.6,000 ஓய்வூதியம் குடுங்க… வழுக்கை தலையர்கள் முதல்வருக்கு கோரிக்கை..

தெலுங்கானா ;

தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களது கோரிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையில் அதில் அவர்,

‘சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள், கிண்டல் செய்யப்படுகிறார்கள்.  பல பிரச்னைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கிறார்கள். அதிலும் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இவர்கள் 4 பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள்.

வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. வழுக்கை தலை இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்” என கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்குகிறீர்கள். அதுபோல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுவோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சங்கத்தின் உறுப்பினரில் ஒருவரான 41 வயதான பி அஞ்சி கூறுகையில், “மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எங்களை காயப்படுத்துகின்றன. முடி குறைவதால் அவர்கள் சிரிக்கிறார்கள், இது எங்களுக்கு மன வேதனையைத் தருகிறது. எங்கள் வழுக்கை தலையை வைத்து அடிக்கடி கேலி செய்வது மிகவும் வேதனையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply