ஜெயிலர் படத்தில் கைக்கோர்த்த மோகன்லால் …..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஜெயிலர் படத்தில் கைக்கோர்த்த மோகன்லால் …..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது.

மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் ‘உன்னைப்போல் ஒருவன்’, விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply