இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான், சிகரெட் போட்டு பிடிக்கும் பாலகிருஷ்ணா !!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான், சிகரெட் போட்டு பிடிக்கும் பாலகிருஷ்ணா !!

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து சென்றாலும் பலரையும் அந்த காட்சி முகம் சுழிக்க வைத்துள்ளது.

சிகரெட் பிடிப்பதே தவறு, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே இணையத்தில் விளாசி வருகின்றனர். சுருதிஹாசன், ஹனிரோஸ் என இரு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளனர்.

அவர்கள் இருவர் நெஞ்சிலும் இல்லை என்றும் குத்தாட்டப் பாடலில் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான் பாலகிருஷ்ணா சிகரெட் போட்டு பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply