முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன?

காய்கறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்,ஒன்று பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் மற்றொன்று பூமிக்கு மேற்புறம் விளையும் காய்கறிகள்.அந்த வகையில், முள்ளங்கியானது,பூமிக்கு அடியில் விளையும் ஒரு காய்கறியாகும்.

சிலர் முள்ளங்கியை பச்சையாக உட்கொள்கின்றனர். எனினும், பல்வேறு வகையான உணவு தயாரிப்புகளில் முள்ளங்கிப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள், முள்ளங்கியை சாலட்டில் சேர்த்து உட்கொள்கின்றனர். முள்ளங்கி இலைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தருகிறது. முள்ளங்கி பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக திகழ்கிறது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது,நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் அதிக காரமான உணவுகளை உண்பது போன்றவற்றால்,மூலநோய் ஏற்படும்.எப்படிப்பட்ட மூல நோயையும் குணப்படுத்தும் தன்மை முள்ளங்கிக்கு உண்டு. தினந்தோறும் முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மூல நோயிலிருந்து நிவாரணம் பெறலாம் .

முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதில் இருக்கும் நார்ச்சத்தின் காரணமாக,எப்படிப்பட்ட செரிமான பிரச்சினையாக இருந்தாலும், சரி செய்கிறது. பித்த நீர் உற்பத்தியை ஒழுங்குப்படுத்தி,பித்தப்பையை பாதுகாக்கிறது.இதைப் போலவே, கல்லீரலையும் பாதுகாத்து,அதன் வேலைகளை செம்மைப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:

முள்ளங்கியில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.இதனால் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க முள்ளங்கி பெரிதும் உதவுகிறது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உகந்த உணவாக, முள்ளங்கி விளங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:

முள்ளங்கியில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகமாக உள்ளன. இதனால் சளி மற்றும் இருமலில் இருந்து உடலை பாதுகாக்கும். அதே வேளையில் உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தையும் மேம்படுத்தும். முள்ளங்கியானது,தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கம் மற்றும் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது.சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின்கள் ஈ, ஏ, சி, பி6 மற்றும் கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும்,ஆரோக்கியத்திற்கும், சிறப்பான பங்களிப்பை தருகிறது.

முள்ளங்கியில் ஆந்தோசயனின்கள் அதிகம் உள்ளது. இது நமது இதயம் சரியாக செயல்பட உதவுகிறது. இதயம் சம்பந்தமான நோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் முள்ளங்கியை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம்,பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நிறைய நன்மைகளை செய்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த சக்கரை அளவு,குறைகிறது. நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முள்ளங்கியுடன், முள்ளங்கி இலைகளையும் உட்கொள்ள, மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,முள்ளங்கி இலைகளை உட்கொள்ள வேண்டும். இது நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் காமாலை நாள்பட்ட காய்ச்சலால் ஏற்படுகிறது. முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோயைக் குறைக்கிறது. மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

மேலும், விஷ பூச்சிகள் நம்மை கடித்து விடுவதால் நமது தோலில் வீக்கம், அரிப்பு மற்றும் தோல் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படியான சமயங்களில் முள்ளங்கியை ஜூஸ் போட்டு குடிப்பது,நமது உடலில் பூச்சிக்கடியினால் ஏற்பட்ட, விஷம் முறியும். பூச்சி கடித்த இடத்தில் முள்ளங்கி ஜூஸின் சில துளிகளை இட்டு தேய்ப்பதும் நன்மையளிக்கும்.

மேலும் உலகியல் தொடர்ந்து உட்கொள்வதனால் சுவாசக் கோளாறு சரும பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் போன்றவற்றை இது சரி செய்கிறது

Leave a Reply