மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த ஹோட்டலில் அன்று நானும் இருந்தேன்.. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டேன் … அதானி திடுக் தகவல் …

மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த ஹோட்டலில் அன்று நானும் இருந்தேன்.. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டேன் … அதானி திடுக் தகவல் …

மும்பை,

இந்தியாவின் கோடீசுவரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் கவுதம் அதானி. உலக பணக்காரராகவும் உள்ள இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது,

மும்பையில் 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, தாஜ் ஓட்டலில் நான் சாப்பிட்டு விட்டு பில்லை செட்டில் செய்து விட்டு கிளம்பலாம் என இருந்தேன். அப்போது, அந்த துயர செய்தி வந்து சேர்ந்தது. ஓட்டலை பயங்கரவாதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கியிருந்த நேரம் அது.

இதனால், நான் உள்பட பலர் ஓட்டலிலேயே அந்த இரவை கழிக்க வேண்டியிருந்தது. அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தோம். ஓட்டல் பணியாளர் வந்து என்னையும், மற்ற விருந்தினர்களையும் பின்பகுதி படிக்கட்டு வழியே அழைத்து சென்று, பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கினார்.

அதன்பின் அடுத்த நாள் காலையில் கமாண்டோ படையினர் வந்த பின்பே ஓட்டலை விட்டு என்னால் வெளியேற முடிந்தது என அவர் கூறுகிறார்.

இதேபோன்று, மற்றொரு முறை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டேன். அது பயங்கர அனுபவம். என்னை பாதுகாக்க வேண்டுமெனில் பெரிய தொகை தர வேண்டும் என அவர்கள் கோரினர். எனினும், அடுத்த நாள் நான் விடுவிக்கப்பட்டேன்.

கடத்தப்பட்டபோது, எனது பாதுகாப்பு என்னுடைய கைகளில் இல்லாதபோதும், நான் நன்றாக உறங்கினேன். நமது கைகளில் இல்லாத ஒரு விசயத்திற்காக நாம் வாழ கூடாது என நான் நம்புகிறேன். அந்தந்த விசயங்கள் அதுவாக நடந்து செல்கின்றன என கூறியுள்ளார்.

எனது வாழ்வில் நடந்த மோசமான அந்த இரு அனுபவங்களை மறப்பது என்பது நன்று என கூறிய அவர், அந்த இரு அனுபவங்களும், வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். அன்புக்கு உரியவர்களை மதிக்க வேண்டும் என அறிய உதவி புரிந்தது என கூறுகிறார்.

Leave a Reply