பாரதியார் வேடத்தில் கமலஹாசனின் ‘தமிழ்நாடு வாழ்க’ …. கோவை எங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…

கோவை ;
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு – தமிழகம் தொடர்பாக பேசியது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் கோவை மாநகரில் உள்ள லங்கா கார்னர் பகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் கோவை மத்திய மாவட்டம் சார்பில் “தமிழ்நாடு வாழ்க” என்ற வார்த்தையுடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், பாரதியார் வேடம் அணிந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தினர் ஒட்டிய இந்த போஸ்டர் வாகனம் மற்றும் தெருவில் செல்லும் மக்களின் கவனத்தை ஒரு சில நிமிடங்கள் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது