ஷாருக்கானின் ‘பதான்’ டிரைலர் வெளியீடு!!

ஷாருக்கானின் ‘பதான்’ டிரைலர் வெளியீடு!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இ

ப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து ‘பதான்’ படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply