மாநகராட்சி ஆணையாளரை டிஸ்மிஸ் செய்ய கோரி நூதனமுறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு…

மாநகராட்சி ஆணையாளரை டிஸ்மிஸ் செய்ய கோரி  நூதனமுறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு…

சேலம் ;

சேலம் மாநகராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்குவதால், வாங்கிய கடன்களுக்கு பணம் செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளதாக கூறி, குணாளன் என்பவர் உடல் முழுவதும் கருப்பு நிறத்தை பூசிக்கொண்டு நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினார்.

மேலும் சிக்கன நாணய சங்கத்தின் மூலமாக பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஊழல் செய்து தூய்மை பணியாளர்கள் மீது வட்டி அதிகளவில் போடுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதால் தூய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்தாார்.

மேலும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் மற்றும் நல அலுவலர் யோகநாத் ஆகியோர் மீது விசாரணை நடத்தி, இடமாற்றம் அல்லது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply