சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்!!

சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்!!

இன்று (செவ்வாய்க்கிழமை) மகம் நட்சத்திரம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவிற்கு உரிய தெய்வம் விநாயகர். இன்று விநாயகருக்கு உரிய திதி (சதுர்த்தி திதி). எனவே சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும். அதாவது நீங்கும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி தினம்.

இன்று அதிகாலை நீராட வேண்டும். விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்த வேண்டும். கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, வெல்லம் முதலியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்து வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து நிலவை பார்த்த பின்னர் இரவு உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்.

Leave a Reply