JIO வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை..!! -ஜியோ நிறுவனம் அதிரடி

JIO வாடிக்கையாளர்களுக்கு  இலவச சேவை..!! -ஜியோ நிறுவனம் அதிரடி

வாடிக்கையாளர்களுக்கு 4 நாட்கள் இலவச சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ வழங்கும் இந்த இலவச டேட்டா மற்றும் கால் சேவைகள் யாருக்கெல்லாம் கிடைக்கும்? நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது.

வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள அசாம் மாநிலம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியப் பகுதிகளில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கு உதவிடும் வகையில் இந்த சேவை வழங்கப்படுவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்கட்டான சூழலில் பொதுமக்கள் தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொள்ள இது உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கில் ஜியோ இதை செயல்படுத்துகிறது.

அனைத்து நெட்வொர்கிற்கும் இலவசம் :

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்கிற்கும் இலவச கால் சேவைகள் மற்றும் அன்லிமிடெட் டேட்டா ஆகிய சேவைகளை 4 நாட்களுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திமா ஹஸோ, கார்பி ஆங்லாக் கிழக்கு, கார்பி ஆங்லாக் மேற்கு, ஹோஜை, கச்சார் ஆகிய மாவட்டங்கள் பயன் அடையும்.

வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் மூலமாக தகவல் :

அவசர காலத்தில் வழங்கப்பட்டுள்ள இலவச சேவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் மூலமாக ஜியோ நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது. அந்த செய்தியில், “பருவநிலை சார்ந்த துன்பியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த சில நாட்களாக நீங்கள் மிகுந்த துயரங்களை எதிர்கொண்டு வருகிறீர்கள். ஆகவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்கள் நம்பருக்கு 4 நாட்கள் இலவச சேவை வழங்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆப் மூலம் உறுதி செய்யலாம் :

இலவச சேவை பெறுவதற்கு தகுதியான வாடிக்கையாளர்கள் யார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே மெசேஜ் வந்திருக்கும். அப்படி வராத பட்சத்தில் ஜியோ ஆப்பிலும் இந்தத் தகவலை சரி பார்த்துக் கொள்ளலாம்.

சப்ஸ்கிரிப்ஷனை சரி பார்ப்பது எப்படி?

முதலில் ஜியோ ஆப் உள்ளே சென்று பேலன்ஸ் சரி பார்க்க வேண்டும். ஆப் ஓப்பன் செய்த உடனே மேல்புறம் இடது கார்னரில் உள்ள ஹம்பர்கர் மெனு மீது கிளிக் செய்யவும். இங்கு டேப் செய்து, மை பிளான்ஸ் என்பதை தேர்வு செய்யவும். வாடிக்கையாளரின் ஜியோ நம்பருக்கு 4 நாட்களுக்கான இலவச சேவை வந்திருக்கிறதா, இல்லையா என்பது இங்கு தெரிய வரும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக 29 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 7.12 லட்சம் மக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளனர். இதுவரையிலும் 14 பேர் வெள்ளம் சார்ந்த இடர்பாடுகளில் பலியாகியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: