கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் உலா!!

கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் உலா!!

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராப்பத்து விழாவின் 8-ம் நாள் விழாவில், வேடுபறி நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது.

முன்னதாக கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதி, கோவில் உட்பிரகாரம் வழியாக வந்து தொடர்ந்து சுவாமி, தீவட்டி பரிவாரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க வர்ணக்குடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Leave a Reply