இளம் பெண்களின் தாகத்தை விரும்பும் ‘பேஷன் ஆப்ஸ்’!!

இளம் பெண்களின் தாகத்தை விரும்பும் ‘பேஷன் ஆப்ஸ்’!!

பேஷன் சம்பந்தமான தகவல்களும், ஆலோசனைகளும் இப்போது அப்ளிகேஷன்களிலே யே கிடைக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான உடைகள் சிறப்பாக இருக்கும்?, எந்த நிறத்திலான உடை பொருந்தும், இந்த காலத்து டிரெண்டிங் உடை எது?, எங்கு வாங்கலாம் என்பது போன்ற, பேஷன் உடைகள் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும், ஒருசில செயலிகள் வழங்கி கொண்டிருக்கின்றன. அப்படி இளைஞர்/இளம்பெண்களின் பேஷன் தாகத்தை தீர்க்கக்கூடிய செயலிகளை பார்க்கலாம்.

வார்டுரோப் அசிஸ்டெண்ட்

திறமையான பேஷன் டிசைனரை, நம்முடன் வைத்திருக்கும் உணர்வை இந்த செயலி அளிக்கிறது. ஏனெனில், இது உங்கள் ஆடைகளை வகைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலைக்கு ஏற்ற உடை எது என்று தினமும் தெரிவிக்கும். மேலும் உலகளவிலான டிரெண்டிங் ஆடைகள் மற்றும் டிசைனர்களின் அப்டேட்களையும் அறியலாம். இதில் ஆடைகளை நல்ல விலைக்கு விற்கும் வசதியும் உள்ளது. அதாவது, நீங்கள் ஓரிரு முறை பயன்படுத்திய அல்லது வாங்கியபின் அளவு, நிறம் போன்றவை பொருந்தாததால் மீண்டும் விற்க நினைக்கும் ஆடைகளை, இந்த ‘ஆப்’பின் வாடிக்கையாளர்களிடையே விற்கலாம். நீங்களும் அதுபோல் மற்றவர்களிடம் இருந்து வாங்கலாம்

பேஷன் குளோசட்

இந்த செயலியை ‘ஆன்’ செய்து, தனித்தனியாக தலைப்புகளில் சேமிக்கப்பட்டுள்ள உடைகளில் பிடித்தவற்றை தேர்வுசெய்து, அதன் பின்புல நிறத்தை மாற்றி மேட்சிங் பார்க்கலாம். பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில் என தோழிகளுடன் பகிர்ந்து கருத்து கேட்கும் வசதியும் உள்ளது.

ஷிசிமோ

நாளைக்கு கல்லூரியில்/ அலுவலகத்தில் முக்கியமான நிகழ்ச்சி. டிரெண்டியான உடையை எப்படி கண்டுபிடிப்பது? எங்கு வாங்குவது என குழப்பமா? விடுங்கள் கவலையை! கல்லூரி பெண்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப், இதைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து உங்களுக்குப் பல்வேறு பேஷன் ஐடியாக்களைப் பெற்றுத் தரும். நீங்களும் உங்கள் ஆடைப் பரிந்துரைகள் மற்றும் ஆல்பங்களை மற்ற பெண்களுடன் பகிர்ந்து, கருத்து பெறலாம்!

ஸ்மார்ட் குளோசட்

ஆடைகளை மேட்ச் செய்து பார்ப்பது மட்டுமல்லாமல், கல்ச்சுரல்ஸ், செமினார், அவுட்டிங் என எந்தெந்த ஆடையை எப்போது அணியலாம் என்று இந்த `ஆப்’பில் உள்ள பிரத்யேகக் காலண்டரில் குறித்துவைத்துக்கொள்ளலாம்; நண்பர்களுக்கும் பகிரலாம்.

பாலிவோர்

இந்த ஆப், ஆடைகளுக்கான ஒரு சமூக வலைத்தளம் போல செயல்படுகிறது. அதாவது இதில் உங்கள் ஆடைகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப்பெறுவதோடு, சந்தையில் உள்ள டிரெண்டிங் ஆடைகளைப் பார்க்கலாம், வாங்கலாம், மற்றும் பிறரின் கருத்துகளையும் பெறலாம். மேலும், இதில் உள்ள ஆயிரக்கணக்கான பிராண்டட் மற்றும் டிசைனர் ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து, பிறகு வாங்குவதற்கென அந்தப் புகைப்படங்களை சேமித்தும் வைக்கலாம்.

Leave a Reply