உடலுக்கு ”ராகி பாதாம் பால்” ஆரோக்கியம் தரும் !!

உடலுக்கு ”ராகி பாதாம் பால்” ஆரோக்கியம் தரும் !!

தேவையான பொருட்கள்
ராகி – 50 கிராம்
பாதாம் – 10
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
நாட்டு சர்க்கரை – 50 கிராம்
பால் – 1 கப்

செய்முறை

முதலில் ராகி, பாதாம் இரண்டையும் முதல் நாள் இரவே தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
பின் மறுநாள் காலையில் ஊற வைத்த ராகி, பாதாம் இரண்டையும் தண்ணீரை வடிகட்டி மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த ராகி, பாதாமை ஒரு வடிகட்டி வைத்து வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் அரைத்து வடிகட்டி வைத்துள்ள ராகி, பாதாம் பாலை அதில் சேர்க்கவும்.
பாலை சேர்த்தவுடன் கை விடாமல் நன்றாக கிளறவும்.
ராகி பால் நன்றாக வெந்து கண்ணாடி போன்று கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறி விடவும்.
ராகி பால் நன்றாக வெந்ததும் 50 கிராம் அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
நாட்டு சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளறி விடவும்.
பின்னர் இதில் 1 கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கொள்ளவும்.
பால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ஒரு சிட்டிகை அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் நன்றாக கலந்து விடவும்.
சுவையான ராகி, பாதாம் பால் ரெடி.
மேலும் இதன் செய்முறையை காண கீழ்காணும் video வை click செய்யவும்.
……..

Leave a Reply