பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் – விபரம் உள்ளே..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் – விபரம் உள்ளே..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் வெளியூர்களுக்கு கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் (மெப்ஸ், ரெயில் நிலையம்), கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 12-ந்தேதி (இன்று) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில், பயணிகளின் வசதிக்காக 340 சிறப்பு இணை மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு 127 பஸ்களும், தாம்பரம் பஸ் நிலையத்துக்கு 115 பஸ்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்துக்கு 57 பஸ்களும், கே.கே.நகர் பஸ் நிலையத்துக்கு 8 பஸ்களும், மாதவரம் பஸ் நிலையத்துக்கு 26 பஸ்களும், பாரிமுனை பஸ் நிலையத்துக்கு 7 பஸ்களும் என மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாட மக்கள் படையெடுக்க தயாராகி விட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14ம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply