கல்லீரலை பாதுகாக்குமா ”கரும்புச்சாறு” ?

கல்லீரலை பாதுகாக்குமா              ”கரும்புச்சாறு” ?

கோடைகாலத்தில் அதிகம் குடிக்க வேண்டிய ஒரு அற்புதமான இயற்கை பானம் கரும்புச்சாறு. சராசரியாக 240 மில்லி கரும்புச்சாற்றில் 250 கலோரிகள் மற்றும் 30 கிராம் இயற்கை சர்க்கரைகள் மட்டுமே உள்ளது. கூடவே கொழுப்பு, கொலஸ்ட்ரால், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

கரும்புச்சாறு நம்முடைய உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. மிக முக்கியமாக கரும்புச் சாற்றை நீங்கள் குடித்தவுடன் உடனடியாக அது ஆற்றலை உங்களுடைய உடலுக்கு கொடுக்கிறது. கோடைகாலத்தில் கரும்புச் சாற்றை நீங்கள் குடிக்கும் பொழுது உங்களுடைய உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது கரும்புச்சாறு. மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு கரும்புச்சாறு சிறந்த இயற்கை சிகிச்சையாக சொல்லப்படுகிறது. கரும்புச்சாறு இயற்கையில் காரத்தன்மை கொண்டது. கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவை கரும்பு சாற்றை இயற்கையில் காரமாக்குகிறது.

இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது கரும்புச்சாறு. கரும்புச்சாற்றில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் செல்களை குறிப்பாக புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

கரும்புச்சாறு செரிமான அமைப்பை ஆரோக்கியப்படுத்துகிறது. கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் உள்ள pH அளவை சமன் செய்து செரிமான சாறுகள் சுரப்பதை எளிதாக்குகிறது. வயிற்றில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கிறது கரும்பு சாறு. இயற்கையான குறைந்த கொழுப்பு, குறைந்த சோடியம், நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாத கரும்பு சாறு சிறுநீரகத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது கரும்புச்சாறு. கரும்புச் சாற்றில் காணப்படக்கூடிய கால்சியம் எலும்பு அமைப்புகளையும் பற்களின் சரியான வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவை தடுக்கிறது கரும்புச்சாறு. கரும்புச் சாற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது பற்களை வலுப்படுத்த உதவுகிறது. பற்சிதைவை குறைக்க உதவுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தையும் குறைகிறது.

கரும்புச்சாறு தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக ஏற்படக்கூடிய சளி மற்றும் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கரும்புச்சாறு உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை உடலிலிருந்து நீக்கி உடலை தூய்மைப்படுத்துகிறது.

உடலில் அதிக சூடு ஏற்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இப்படி உடலில் ஏற்படக்கூடிய சூட்டை குறைத்து உடலை இயல்பாக வைத்திருக்க கூடிய சூழல் கரும்புச்சாற்றுக்கு உண்டு. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து கரும்பு சாற்றை குடித்து வாருங்கள்.

Leave a Reply