நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தராக பிரதமர் மோடி – பாஜக எம்.பி பேட்டி..!!

நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தராக பிரதமர் மோடி – பாஜக எம்.பி பேட்டி..!!

சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்ததினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மேற்குவங்காளத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தையொட்டி நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. சவுமித்ரகான் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சவுமித்ரகான் கூறுகையில், சுவாமி விவேகானந்தர் புதியவடிவில் பிரதமர் மோடியாக மறுபிறவி எடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர்.

தனது தாயாரை இழந்தபோதும் பிரதமர் மோடி இந்த நாட்டுகாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டதை பார்க்கும்போது ‘நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தராக பிரதமர் மோடி’ என எனக்கு தோன்றுகிறது’ என்றார்.

Leave a Reply