முதல் ஒருநாள் போட்டி – இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டி!!

முதல் ஒருநாள் போட்டி – இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டி!!

ஐதராபாத்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதமும், டி20 தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.

இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்தது. விராட் கோலியும் சதத்துடன் பல சாதனைகள் புரிந்தார்.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

இரு அணிகளும் இன்று மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை. இன்றைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்களின் விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.

Leave a Reply