பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிடுவதை விட இரவில் ஊறவைத்த பாதாமை உட்கொள்வது சிறந்த ஊட்டச்சத்து!!

பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிடுவதை விட இரவில் ஊறவைத்த பாதாமை உட்கொள்வது சிறந்த ஊட்டச்சத்து!!

பாதாம் அனைவரும் சுவைக்க விரும்பும் பருப்பு வகைகளில் ஒன்றாகும். அவற்றை பச்சையாக சாப்பிடுவது முதல் புட்டிங் மற்றும் மில்க் ஷேக் ஆகியவற்றில் சேர்ப்பது வரை, அவை பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகின்றன. இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளதாகவும், ஆரோக்கியத்துக்கான ஏராளமான நன்மைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பாதாம் பருப்பை ஒவ்வொரு நாளும் தவறாமல் சாப்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம். இருப்பினும், பாதாம் சாப்பிடுவதற்கான சரியான வழி பற்றி அடிக்கடி வாதிடப்படுகிறது.

பாதாம் பருப்பை ஒரே இரவில் ஊறவைப்பதே சிறந்த வழி என்று பலர் கூறுகின்றனர். பாதாம் பருப்பை பச்சையாக சாப்பிடுவதை விட இரவில் ஊறவைத்த பாதாமை உட்கொள்வது சிறந்த ஊட்டச்சத்து நன்மைகளைத் தரும் என்று மக்கள் அதிகம் நம்புகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.

ஆய்வுகளின்படி, மக்களின் கருத்துக்கு மாறாக, ஊறவைத்த பாதாம் மெல்லுவதற்கு மட்டுமே எளிதானது, மேலும் பாதாமின் ஊட்டச்சத்து நன்மைகளில் இதனால் எந்தவிதத் தாக்கமும் இல்லை. சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாகவும், வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்ததாகவும் இருக்கும் பாதாம், எந்த வடிவமாக இருந்தாலும், ஊட்டச்சத்தின் சக்தியாக விளங்குகிறது. இருப்பினும், சில ஆய்வுகள் வேறுவிதமாக பரிந்துரைக்கின்றன.

சாப்பிடுவது எப்படி..?

பகலில் எந்த நேரத்திலும் பாதாம் பருப்பை உட்கொள்ளலாம். பாதாம் பல சத்துகளை உள்ளடக்கிய ஒரு பருப்புவகை, மற்றும் இதனை எந்த வடிவத்திலும் சாப்பிடலாம் . உதாரணத்துக்கு பச்சையாகவோ, அல்லது சிற்றுண்டியாகவும், உணவின் ஒரு பகுதியாகவும் அல்லது ஸ்வீட்டாகவோ உண்ணலாம். வீட்டிலோ, வேலையிலோ அல்லது பயணத்திலோ, ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துச் செல்வது ஒரு வசதியான சிற்றுண்டியாகும்.

ஏனென்றால் எந்த சமையத்திலும் நீங்கள் சட்டென உங்கள் பையில் இருந்து இரண்டு மூன்று பாதாம்களை எடுத்து மெல்லலாம்.கையடக்க பாக்ஸ் ஒன்றில் சில பாதாம் பருப்புகளைப் போட்டு அதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இதனால் நீங்கள் உங்கள் தினசரி நியூட்ரிஷனில் சரியானதொரு பகுதியைப் பெறுவீர்கள். இருப்பினும், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பாதாம் பருப்பை மட்டுமே நம்பி இருக்காமல், ஒரு நிபுணரை அணுகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

தோல் நீக்கலாமா? வேண்டாமா?

தினமும் 3-4 பாதாம் பருப்புகளை காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிடும் போது உங்களுக்கு அன்றைக்கு தேவையான உடனடி ஆற்றலை நீங்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம். இதோடு மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் டயட் என்கிற பேரில் காலை உணவாக ஓட்ஸ், ப்ரூட் ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். எனவே அப்போது அதனுடன் பாதாம் பருப்பினையும் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும் உலர் திராட்சை, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள் நீங்கள் திண்பண்டங்களாக சாப்பிடும் பொழுது பாதாம் பருப்பையும் மக்கள் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதோடு குழந்தைகளுக்கு வீட்டிலேயே குக்கீஸ்கள், லட்டுகள், பாயசம் போன்றவை செய்துக்கொடுக்கும்போது பாதாமினை அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாதாமினை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிகப்படியான ஆற்றல்களை நாம் பெறுகிறோம். ஆனால், தினமும் 6-8 பாதாம் பருப்பினை விட அதிகப்படியாக உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நமக்கு அதிகப்படியான எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, உடலில் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. எனவே தினமும் 3-4 பாதாம் பருப்பினை மட்டும் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்

Leave a Reply