யோகானந்தர் அருளிய ஆன்மீகப் பாடங்கள்…

யோகானந்தர் அருளிய ஆன்மீகப் பாடங்கள்…

கோவை:

பரமஹம்ச யோகானந்தர் அருளிய ஆன்மீகப் பாடங்கள்  யோகதா சத்சங்க ஸொஸைட்டியினால் தமிழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடங்களின் மகத்துவத்தை அகர வரிசையில் அறிந்து கொள்வோமா?

அனுபவத்தால் – ஆன்ம ஞானம்
ஆன்ம அனுபூதி – படிப்படியாக
இல்லம் தேடி வரும் -இறை ஞானக் கல்வி
ஈடு இணையற்ற – ஆன்மீகக் கல்வி
உய்வு நல்கும்  – உன்னத உத்திகள்
ஊக்கம் நல்கும் – உயர்ந்த சிந்தனைகள்
எழுச்சி ஊட்டும் – பிரார்த்தனைகள்
ஏன் இப்பிறவி? – என உணர்த்தும் கல்வி
ஐயங்களை -அறவே அகற்ற வல்லவை
ஒளிமயமான வாழ்வு- இருளில் இருந்து
ஓதி உணர- உறுதிமொழிகள்
ஔடதம்- ஆன்ம அறியாமை பிணிக்கு

தாய் மொழியாம் தமிழில் கற்கும் போது ஆன்மீகப் பாடங்களை  செவ்வனே உள்வாங்கி உணர இயலும்.

மேலும் இப்பாடங்கள் பயில்வோர் வலை தளத்திலிருந்து அதற்காக வடிவமைக்கப்பட்ட YSS பாட செயலியைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பயன்படுத்தி ஆன்மீகப் பாடங்களை நீங்கள்  செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் கைபேசியில் படிக்கலாம் அல்லது வாசிக்கக் கேட்டும் பயன் பெறலாம்.

மேலும் இதன் மூலமாக ஆன்மீக உத்திகள் குறித்த சன்னியாசிகளின் விளக்க உரைகளையும், செயல் விளக்கங்களையும் கேட்டும் கண்டும் தெளிவு பெறலாம். பாடங்கள் ராஞ்சி யோகதா சத்சங்க ஆசிரமத்திலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை அனுப்பப்படும்.18 பாடங்களைத் தபால் மூலம் பெற ஆகும் செலவு ₹ 600 மட்டுமே.

எனவே வீடு தேடி வந்து வீடு பேறு நல்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். பதிவு செய்வீர். பாடங்களைப் பெறுவீர். கசடறக் கற்பீர். கற்றபடி நிற்பீர். ஆன்ம அனுபூதி அடைவீர்.

இது குறித்த கூடுதல் தகவல் பெற கோவை யோகதா சத் சங்க தியான கேந்திரத்துடன்‌தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்:
90806 75994.

Leave a Reply