இது மட்டும் நடந்திருந்தால் அண்ணாமலைக்கும் சேர்த்து வீரவணக்கம் கூட்டம் நடந்து இருக்கும்… திமுக மாணவரணி தலைவர் பேச்சு ..

இது மட்டும் நடந்திருந்தால் அண்ணாமலைக்கும் சேர்த்து வீரவணக்கம் கூட்டம் நடந்து இருக்கும்… திமுக மாணவரணி தலைவர் பேச்சு ..

சென்னை ;

இண்டிகோ விமானத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  

இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.   தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  தவறுதலாக கை நீட்டும்போது கதவு திறந்துகொண்டது என்று தேஜஸ்வி சூர்யாவும், அண்ணாமலையும் விளக்கம் அளித்திருப்பதாக தகவல் வெளிவந்தது .

இதையடுத்து,  விமானம் புறப்படுவதற்கு முன்பு தவறுதலாக அவசர வழி கதவை திறந்ததாக தேஜஸ்வி சூரியா தெரிவித்திருக்கிறார்.  கதவு திறக்கப்பட்டு விட்டது என்பதை அவரே விமான குழுவிடமும் தெரியப்படுத்தி இருக்கிறார்.  பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு விமானம் பயணத்தை தொடங்கியது.

  தாமதமானதற்கு மன்னிப்பு கடிதமும் கொடுத்திருக்கிறார் தேஜஸ்வி சூர்யா என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி கூறுகையில் ,  விமானங்களை கடத்துவது, சேதப்படுத்துவது பல நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கை ஆகும் . அப்படிப்பட்ட செயல் தான் அண்ணாமலை&கோ செய்தது.  

நின்ற விமானத்தில் கதவை திறந்ததால் பல உயிர்கள் தம்பித்தது.  ஓடும் விமானத்தில் கதவை திறந்து இருந்தால் அண்ணாமலைக்கும் சேர்த்து வீரவணக்கம் கூட்டம் நடந்து இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் .

Leave a Reply