துணிவும் இல்லை , வாரிசம் இல்லை… பொங்கல் வசூலில் நம்பர் ஒன் டாஸ்மாக் தான் …

துணிவும் இல்லை , வாரிசம் இல்லை… பொங்கல் வசூலில் நம்பர் ஒன் டாஸ்மாக் தான் …

கோவை;

தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் வாரிசு துணைவு என இரு படத்தில் யார் படம் கலெக்ஷன் அதிகம், வாரிசா? துணிவா? என போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இருவரையும் தாண்டி டாஸ்மாக் அதிக கலெக்ஷனை அள்ளி லாபம் பார்த்துள்ளது.

சாதாரண நாட்களில் தமிழகத்தில் மது விற்பனை 75 முதல் 85 கோடி வரையில் இருக்கும், இதுவே சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சற்று அதிகமாகி 90 கோடி முதல் 100 கோடி வரை செல்வது வழக்கம்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என தெரிந்ததால் முந்தைய நாட்களில் அவர்களுக்கு தேவையான பாட்டில்களை வாங்கி கூட இருப்புவைத்து குடிக்கும் அளவிற்கு டாஸ்மாக்கில் மது விற்பனை களைகட்டுகிறது.

இந்த முறை பொங்கல் பண்டிகை, அரசு விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொங்கல் பண்டிகை துவங்கியது அதாவது போகி பண்டிகை சனிக்கிழமை, அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தை பொங்கல் என இரண்டு நாட்கள் பண்டிகை தொடங்கியதால் டாஸ்மாக் வசூல் விவரங்கள் ஓரளவுக்கு வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் சாதாரண நாட்களில் 75 கோடி ரூபாய்க்கு விற்கும் மது சனிக்கிழமை போகிப் பண்டிகை அன்று 250 கோடி ரூபாய்க்கு அதாவது மூன்று மடங்கு அதிகமாக விற்று உள்ளது. அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும், பொங்கல் தினத்தன்று 450 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடந்திருக்கலாம் என சில தரப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வார பொங்கல் பண்டிகையின் டாஸ்மாக் விற்பனையை கணக்கு வைத்து பார்க்கும் பொழுது எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்டி இருக்கலாம் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விடுமுறை தினங்களில் நடத்தப்படும் மதுபான சேல்ஸ் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் செய்திகளாக வெளியிடுவதில்லை.

அதற்கு முன்னால் டாஸ்மாக் நிர்வாகம் மொத்த மதுபான விற்பனை எவ்வளவு என விவரங்கள் வெளியிட்டு வந்து நிலையில் தற்போது அது வெளியிடாத காரணமும் என்னவென்று தெரியவில்லை . ஒருவேளை தமிழக குடிமகன்களின் குட்டு வெளிப்பட்டு விடும் என அரசு வருத்தபடுகிறதோ என்னவோ?

துணிவா? வாரிசா? என திரையரங்கில் பாதி தமிழர்கள் இருந்தாலும் மீதி தமிழர்கள் துணிவாவது, வாரிசாவது எங்களுக்கு பாட்டில் தான் பெருசு என மதுபான கடைகளின் முன்பு கிடக்கிறார்கள் இதுதான் தமிழக பண்டிகை காலங்களில் பண்டிகை கொண்டாட்ட நிலை!

Leave a Reply