சிக்கலான இருதய அறுவை சிகிச்சைக்கு நவீன நுண்துளை மூலம் அறுவை சிகிச்சையளித்து சாதனை புரிந்த ராயல் கேர் மருத்துவமனை…

கோவை
ஒரு வருடத்திற்கும் மேலாக இருதய நோய்க்காரணமாக அவதிப்பட்ட 55 வயது பெண்மணிக்கு ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன முறையில் நுண்துளை அறுவைசிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
மிகவும் சிக்கலான இருதய அறுவைசிகிச்சையை வழக்கமாக செய்யும் அறுவைசிகிச்சை போல் இல்லாமல் சிறு துவார வழியாக இருதய அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது .
நடு மார்பகத்தை பிரித்து அளிக்கப்படும் சிகிச்சையிலிருந்து மாறுபட்டு இடது மார்பகத்தின் கீழ் ஒரு சிறு துவாரத்தின் வழியாக லேப்ரோஸ்கோபி உபகரணத்தை செலுத்தி வெற்றிகரமாக சிக்கலான இருதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது .
இதற்கென பிரத்யேக பயிற்சி பெற்ற இருதய அறுவை சிகிச்சை பிரபல மருத்துவர் டாக்டர் S. கிருஷ்ண கிஷோர் குழுவினர் சிகிச்சையளித்தனர். இதன் மூலம் அதிக வலியின்மை , குறைந்த நாட்களுக்குள் திரும்ப இயல்பு நிலையை அடைதல் , சிறுதழும்பு போன்றவைகள் இச் சிகிச்சையின் சிறப்பம்சங்கள் ஆகும்.
இருதய நலத்துறை டாக்டர்கள் K.சொக்கலிங்கம் , S.கிருஷ்ண கிஷோர் குழுவினை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் பாராட்டினார்.