100 ரூபாய்க்காக வாடிக்கையாளரை அலட்சியப்படுத்தி அலையவைத்த வங்கி அதிகாரிகள்.. அதிரடி ஆணை இட்ட நீதிமன்றம்…

100 ரூபாய்க்காக வாடிக்கையாளரை  அலட்சியப்படுத்தி அலையவைத்த வங்கி  அதிகாரிகள்.. அதிரடி ஆணை இட்ட   நீதிமன்றம்…

சென்னை;

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் சென்னை சௌகர்பேட்டை பகுதியில் ,  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், நண்பர் ஒருவருக்கு நேரடியாக சென்று 900 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய ரசீது மூலம் கொடுத்து கட்டி உள்ளார்.

இதற்கு ஆயிரம் ரூபாயை அவர் கொடுத்துள்ளார்.இந்த மீதி பணம் 100 ரூபாய் கேட்கும் பொழுது, ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் நிர்மல் குமார் தனக்கு மீதி சில்லறை 100 ரூபாய் தர வேண்டும் என வங்கி மேனேஜரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை வங்கி மேனேஜர் தட்டிக் கழித்துள்ளார்.

இதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சர்குலர் ஆபீஸ் சென்று, இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.  இதனை அடுத்து மும்பை அலுவலகத்தில் சென்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த நிர்மல் குமார், செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, நஷ்ட ஈடாக 50000, வழக்கு விசாரணைக்காக நடைபெற்ற 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து 65 ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட நபருக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதுகுறித்து பாதிப்படைந்த நிர்மல் குமார் கூறுகையில்,

”வங்கி ஊழியர்கள் இதுபோன்று நடந்து கொண்டது சரியல்ல. எனவே வழக்கு தொடர்ந்தேன். ஆனால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை, வங்கி அதிகாரிகளும், வங்கியும் நியாயப்படி நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply