மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குதிரை வண்டி ஓட்டி வந்த தமிழக அமைச்சர்…

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குதிரை வண்டி ஓட்டி வந்த  தமிழக அமைச்சர்…

திருவாரூர் ;

சூழலியல் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் பசுமைப் பள்ளி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவாரூரில் தொடங்கி வைத்தார். 

சூழலியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்த பசுமைப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் அன்பில் அறிவித்தார். அதையடுத்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பசுமைப் பள்ளி திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், குதிரை வண்டியில் சென்ற அமைச்சர் அன்பில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்தத் தேர்தலில் விதைகள் அடங்கிய மஞ்சப்பை தொகுப்புகளையும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் வழங்கினார். 

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உயர் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply