வைகோ, அழகிரி ,திருமா,முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் தங்கள் வாய்க்கு திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டார்கள்… செல்லூர் ராஜூ கிண்டல் ..

வைகோ, அழகிரி ,திருமா,முத்தரசன், பாலகிருஷ்ணன்  உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் தங்கள் வாய்க்கு  திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டார்கள்… செல்லூர் ராஜூ கிண்டல் ..

மதுரை;

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

எம்ஜிஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடியவில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்ஜிஆரை சித்தப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது. தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தராத ஆட்சி திமுக.

அதிமுகவினர் யாருடைய வாரிசு? யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் வாரிசு. அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்.

ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர். ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

திமுக பொய்மூட்டைகளை சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள். திமுகவில் 35 பேர் அமைச்சராக இருந்தாலும் 10வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும், ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் என பேசியவர் உதயநிதி.ஆனால் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து இருக்கிறார்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல தன் மகனை புகழ்ந்து பேசுகிறார் ஸ்டாலின். கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டார்கள் என்றார்.

Leave a Reply