ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்… கிறிஸ்துவ மத போதகர் மீது இளம்பெண் பாலியல் புகார்…

ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்… கிறிஸ்துவ மத போதகர் மீது இளம்பெண் பாலியல் புகார்…

மதுரை ;

மதுரை மாவட்டத்தில் வண்டியூரைச் சேர்ந்தவர் வர்ணிகா . இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அளித்துள்ள புகார் மனுவில்,  

பத்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மனைவி போல் வாழ்ந்து வந்தார் கிறிஸ்துவ மத போதகர் சாமுவேல்.  அவர் தன்னை பலமுறை உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.   தற்போது திருமணம் செய்து கொள்ள  மறுக்கிறார்.

மனைவி போல் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆசை வார்த்தை கூறி வாழ்ந்து விட்டு இப்போது என்னை ஏமாற்றி விட்டார்.  இப்போது அந்த மத போதகர் சாமுவேல் சென்னையைச் சேர்ந்த பிளஸ்சி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டபோது,  தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

 தொலைபேசியில் பேசினால் தகாத வார்த்தைகளில் பேசி திட்டுகிறார்.   தொடர்ந்து அவரிடம் பேசினால் நாம் உல்லாசமாக இருந்ததை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறேன்.  தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால் அந்த படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்.  

இந்த ஆதாரங்களை வைத்து பல முறை எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார்.  அவர் விருப்பத்திற்கு எல்லாம் இணங்க மறுத்ததால் அடித்துக் கொடுமைப்படுத்தினார் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருக்கிறார் .

மேலும் ,  குடும்ப கஷ்டம் என்று சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டார்.  அதையும் திருப்பி தர மறுக்கிறார்.   அந்த பணத்தையாவது கொடுங்கள் என்று கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்.  

இதனால் மணமுடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று  தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply