1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் ..ஒருவர் கைது.. கோவையில் அதிகரிக்கும் போதை பொருள்கள் விற்பனை ..

1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் ..ஒருவர் கைது.. கோவையில் அதிகரிக்கும் போதை பொருள்கள் விற்பனை ..

கோவை;

கோவையில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கோவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள், மற்றும் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது .இந்நிலையில் போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கோவை சுல்தான்பேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட சித்தநாயக்கன் பாளையம் பகுதியில், போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை  விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமார் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply