ஓபிஎஸ் குஜராத் மட்டுமில்ல, பீகார் , ஓடிஸா-ன்னு எங்க வேணா போகட்டும் எங்களுக்கு கவலை இல்ல… ஜெயக்குமார் பேச்சு ..

சென்னை;
நாங்கள் தான் அதிமுக என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்ல முடியாது என்றும், சட்ட ரீதியாக அது தவறு என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்தக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “ஓபிஎஸ் குஜராத் சென்றது குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இந்தியா ஒரு சுதந்திர நாடு. அவர் குஜராத், பீகார், ஒடிசா என எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அது பற்றி கவலை கிடையாது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதோடு, சிறப்பாக அதிமுக செயல்பட்டு வரும் நிலையில், நாங்களே அதிமுக என்று ஓபிஎஸ் சொல்லமுடியாது.
சட்ட ரீதியாகவும் அது தவறு. ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால், அவரை ஒரு சுயேட்சை வேட்பாளராகவே மக்கள் கருதுவார்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். ” என்று தெரிவித்தார்.