ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஷபலென்கா, பிளிஸ்கோவா ……..

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஷபலென்கா, பிளிஸ்கோவா ……..

மெலபோர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அரினா ஷபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) எதிர் கொண்டார்.

இதில் ஷபலென்கா 7-5, 6-2, என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 27 நிமிட நேரம் தேவைப்பட்டது.

24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்கு நுழைந்து உள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டும், 2021-ம் ஆண்டும் 4-வது சுற்று வரை வந்ததே சிறந்த நிலையாக இருந்தது. ஷபலென்கா கால் இறுதியில் குரோஷியாவை சேர்ந்த டோனாவை சந்திக்கிறார்.

64-வது வரிசையில் உள்ள டோனா 4-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசுவை சேர்ந்த லின்டாவை 6-2, 1-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

30-வது வரிசையில் உள்ள கரோலினா பினிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சூயி ஷாங்கை எதிர் கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

அவர் கால் இறுதியில் போலந்தை மக்டா லினிட்ன சந்திக்கிறார்.

4-வது வரிசையில் இருக்கும் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். மக்டா லினிட் 7-6 (7-3), 6-4 என்ற கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். லினிட் முதல் தடவையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ரைபகினா (ரஷியா)-ஆஸ்டா பென்கோ (லாத்வியி), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா)-விக்டோரியா அசரென்கா (பெலராஸ்) மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கரண் கச்னோவ் (ரஷியா), செபஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஜிலி லபேகா (செக்குடியரசு) ஆகியோர் கால் இறுதிகு தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply