இப்படி க்யூட்டாக கார் துடைக்கும் மனிதக் குரங்குங்கள்!!

இப்படி க்யூட்டாக கார் துடைக்கும் மனிதக் குரங்குங்கள்!!

நம் ஊரில் ரீல்ஸ், புதுப்புது ட்ரெண்ட் என இன்ஸ்டாவில் இளைஞர்கள் கோலோச்சும் நிலையில், வெளிநாடுகளில் சாகச விரும்பிகள், மிருகக்காட்சி சாலை காப்பாளர்கள் என சுவாரஸ்யமான வேலைகளில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

அந்த வகையில் மிருககாட்சி சாலையில் பணிபுரியும் கோடி ஆண்டில் எனும் நபர் தொடர்ந்து தான் பணிபுரியும் Myrtle Beach Safari மிருகக்காட்சி சாலையும் பராமரிக்கப்பட்டு வரும் மனிதக்குரங்குகள், வெள்ளைப் புலி, சிங்கம் ஆகியவற்றின் படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பிரபல பதிவராக வலம் வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக இவர் பராமரித்து வரும் மனிதக் குரங்குகள் மாய்ந்து மாய்ந்து காரைத் துடைக்கும் வீடியோ இந்தப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு மிக நெருக்கமாகவும் மனிதர்களை ஒத்த பண்புகளையும் கொண்டிருக்கும் மனிதக் குரங்குங்கள் இப்படி க்யூட்டாக கார் துடைக்கும் வேலையில் ஈடுபடும் வீடியோ இன்ஸ்டாவில் 39 ஆயிரம் லைக்ஸ்களைக் கடந்து இன்ஸ்டாவாசிகளின் இதயங்களை அள்ளி வருகிறது.

இதேபோல் முன்னதாக கோடி பராமரித்து வரும் மனிதக் குரங்கு ஒன்று ஆண்டிலின் கையைப் பிடித்து கை ரேகையை ஆராய்ச்சி செய்யும் வீடியோவும் ஹிட் அடித்தது.

சுகிர்வா எனும் இந்த மனிதக் குரங்கு இவரது கையைப் பிடித்து ஜோசியம் பார்ப்பது போல் கை ரேகையை ஆராயும் நிலையில், டாக்டர் சுகிவா என் கையில் சிறு கீறல் இருந்தாலும் இப்படி ஆராய்ச்சி செய்கிறார் என மகிழ்ச்சியுடன் கோடி ஆண்டில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவும் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி நெட்டிசன்களின் ஜாலியான கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

Leave a Reply