”தளபதி 67” படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர் !!

”தளபதி 67” படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர் !!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தளபதி 67 படம் குறித்து ஃபகத் பாசில் தெரிவித்திருப்பது மேலும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஃபகத் பாசிலிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிரீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஃபகத், தளபதி 67 படம் எல்சியூ (LCU) கீழ் வருகிறது.

அதனால் நான் அதில் நடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply